திருவள்ளுவர் அருளிய முப்பால் — அறம், பொருள், இன்பம்
தமிழின் தலைசிறந்த வாழ்வியல் நூலான திருக்குறள், உலக மக்கள் யாவரும் இன்புற்று வாழ வழிவகுக்கும் தத்துவப் பெட்டகம். இது மதம் கடந்து, காலம் கடந்து மனித ஒழுக்கத்தையும் இறையுணர்வையும் போதிக்கிறது.
அறத்துப்பால் (38 அதிகாரங்கள்)
கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை முதல் இல்லறம், துறவறம், வாய்மை, கொல்லாமை, இன்னா செய்யாமை வரை மனித மனதின் உன்னத தர்மங்கள்.
பொருட்பால் (70 அதிகாரங்கள்)
அரசியல், அமைச்சு, தூது, கல்வி, கல்லாமை தவிர்த்தல், பெரியாரைத் துணைக்கோடல், நாடு, அரண், நட்பு மற்றும் குடிசெயல்வகை ஆகிய ஆட்சி மற்றும் சமூக நெறிகள்.
காமத்துப்பால் (25 அதிகாரங்கள்)
களவியல் மற்றும் கற்பியல் மூலமாக தூய மனிதக் காதலையும், ஆன்மாவின் இணைப்பையும் மிக நுண்ணிய கவித்துவத்துடன் எடுத்துரைக்கும் பகுதி.
"வள்ளுவர் சொன்ன அறம் வேத தர்மத்திலிருந்து சிறிதும் மாறுபட்டதல்ல. வேதங்களில் விவரிக்கப்பட்ட சத்யம், தர்மம், அஹிம்சை ஆகிய மூன்றையும், எளிய பாமரனும் புரிந்துகொள்ளும் வண்ணம் இரண்டே அடிகளில் உலகிற்கே அளித்தவர் திருவள்ளுவர். திருக்குறளைப் படித்தால் ஒரு மனிதன் ஒழுக்கமுள்ளவனாக, பண்புள்ளவனாக, தெய்வ நிலை அடைந்தவனாக உருவெடுப்பான்."
குரு குல தேசம் திருக்குறள் இசைத் திரைப்படங்களின் நோக்கம்
புதிய யுகத்தின் இளைய தலைமுறையினர் திருக்குறளை வெறுமனே மனப்பாடம் செய்யாமல், அதன் ஒவ்வொரு அதிகாரத்தின் ஆழமான தத்துவத்தையும் உணர்ந்து வாழ்வதற்காகவே, 84 அதிகாரங்களுக்கு முழுமையான சினிமா இசைக் காட்சிப் படங்களும், 101 அதிகாரங்களுக்கு இசை வெளியீடுகளும் இங்கு வழங்கப்பட்டுள்ளன.